top of page
god1.png
temple-lamp-png-2-141x200 l.png
god4.png
kovil png.png
temple-lamp-png-3-141x200.png

ஆன்மிகம்

god2.png
god5.png
ஆன்மிகம் செய்திகள்

கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம்

 

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி, பழநி போன்ற முக்கிய கோயில்களில் 31-ம் தேதிவரை தரிசனம் ரத்து!

சபரிமலை கோவில் நடை வரும் 13-ம் தேதி திறப்பு: ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த முடிவு

கொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்

வெண்ணெய் வீசுதலுக்குத் தடை! மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் திருவிழா கட்டுப்பாடுகள்

இந்த வாரம் என்ன விசேஷம்?

மே 8, சித்திரை 25: அழகர்கோவில் கள்ளழகர் மண்டூகருக்கு மோட்சம் அளித்தல்

மே 9, சித்திரை 26: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் நாச்சியார் திருக்கோலம், திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை

மே 10, சித்திரை 27: சங்கடஹர சதுர்த்தி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சூர்ணோற்ஸவம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம்

மே 11, சித்திரை 28: சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம்

மே 12, சித்திரை 29: சுவாமி மலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், உய்யக்கொண்டான் சிறுவயல் பொன்னழகியம்மன் ஆராதனை

மே 13, சித்திரை 30: முகூர்த்த நாள், திருவோண விரதம்.

மே 14, வைகாசி 1: விஷ்ணுபதி புண்ணிய காலம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருவாய்மொழி சாற்றுமுறை

வைகாசி பூஜை: சபரிமலை நடை திறப்பு

சபரிமலை : வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

  சபரிமலை கோவிலில் மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். பின்னர் மாளிகைப்புறம் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, ஊழியர்களுக்கு திருநீறு வழங்கினார். வேறு பூஜைகள் நடைபெறவில்லை. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்துவார். பின்னர் கணபதி ஹோமமும், தொடர்ந்து உஷபூஜை, உச்சபூஜை நடத்தப்பட்டு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அத்தாழபூஜைக்கு பின்னர் இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

  மே 19- வரை எல்லா நாட்களிலும் இதே நேரங்களில் பூஜைகள் நடைபெறும். நெய்யபிஷேகம், படிபூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. 19- இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். கொரோனா காரணமாக கடந்த மாதம் போன்று இந்த மாத பூஜையிலும் பக்தர்கள் பங்கேற்க முடியாது. வழிபாடுகள் நடத்த விரும்பும் பக்தர்கள் www.onlinetdb.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

Anchor 1
bottom of page